புதிதாக டைப் பண்ணும் போது எப்படி தெரியும் என்று தெரியவில்லை
புது அலுவலகத்தில் தமிழ் தட்டச்சு இல்லை, மேலும் என்ன செய்தும் முரசு அஞ்சல், ஈ கலப்பை எதுவும் நிறுவ முடியவில்லை. வொர்டில் டைப் அடிக்கலாம் என்றால் யுனிக்கோடே எழுத்துருவில் இல்லை. ஏதோ கூகுளாண்டவர் புண்ணியத்தில் தமிழ் blogs, google reader புண்ணியத்தில் படிக்க முடிகிறது. இருந்தாலும் ஏதாவது முயற்சி செய்து ஈ கலப்பையை நிறுவியே ஆக வேண்டும்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, என் நண்பனை சந்திக்க முடிந்தது. கிட்டதிட்ட எட்டு வருடத்திற்கு பிறகு பார்த்தேன். பல கதைகள் பேசி பொழுதை கடத்த எண்ணினோம், ஆனால் அன்று பார்த்து அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர தாமதமாகி விட்டது.
பார்த்து பேசிய சிறிது நேரத்துக்கு பிறகு கிளம்பிவிட்டான், அடுத்த நாள், நண்பனுக்கு கடல் கடந்து விமான பயணம் வேறு, வீட்டில் எடுத்த புகைப்படம் தான் அடுத்து சந்திக்கும் வரை நினைவுகளை பசுமையாக வைத்திருக்க உதவும். விரைவில் மீண்டும் சந்திப்போம் என எண்ணுகிறேன்.
Thursday, September 27, 2007
Monday, July 23, 2007
Thursday, July 05, 2007
நுழைவு தேர்வும் - முடிவும்
ப்ளாக் போட்டு ரொம்ப நாளாகுதா, கை பர பரனு வருது சும்மாவா சொன்னாங்க ப்ளாக் எழுதினவங்க கை சும்மா இருக்காதுனு.
ப்ளாக்ல் IP address and date தெரியப்படுத்தும் நிரல் கிடைத்தது பிறகென்ன உடனேயே வார்ப்புருவில் போய் copy paste பண்ணுவது தானே நமது வேலை. ஆனாலும் preview பார்க்கும் வரை பயம் தான் எங்கே எப்படி காண்பிக்குமோ என்று.
Preview ஒழுங்காக வந்தது பிறகென்ன முதல் வரியை மறுபடியும் படிக்கவும்.
Bloggerல் கணக்கு தொடங்கும் முன்பே wordpressல் அது என்ன என்று தெரியாமலே ஒரு கணக்கை வைத்து இருந்தேன். Bloggerல் பதிவை போட்டவுடன் தான் தெரிந்து கொண்டேன் wordpressலும் இதே போல் பதிவை போடலாம் என்று.
அப்புறம் வழக்கம் போல் நகலெடுத்து wordpressல் ஒட்டி wordpressக்கு ஒரு இணைப்பையும் Bloggerல் கொடுத்து வைத்தேன். சுட்டியை இணைப்பில் சொடுக்கினால் ஆவ்!! அது wordpressக்கு கொண்டு போய்விடுகிறது இது வெற்றிகரமாக வந்தவுடன் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
முன்பு ஒருமுறை இப்படிதான் ஒரு நிரலை நகலெடுத்து ஒட்டி preview பார்த்தால் மொத்த விஷயமும் இடம் மாறி பார்க்கவே unsakikableஆ இருந்தது அதிலிருந்து இந்த preview பார்த்து அது ஒழுங்காக தெரியும் வரை வயிற்றில் ஜில் தான்.
ப்ளாக் வார்ப்புருவில் நல்ல திறன் உள்ளவர்கள் எங்கே edit செய்தால் எந்த இடத்தில் நமது நிரலின் பலன் தெரியும் என்று பின்னூட்டத்தில் வந்து தெளிவுப்படுத்தினால் உதவியாக இருக்கும்.
இதெல்லாம் ப்ளாக் பார்த்தாலே தெரியுதே அப்புறம் ஏன் எழுதணும்னு கேட்க தோணுதா?.
இருக்கு காரணம் இருக்கு.
மகனின் பள்ளி சேர்க்கைகாக (வகுப்பு 1) ஒவ்வொரு பள்ளியாக அலைய வேண்டியிருந்தது. வீட்டின் அருகில் இருக்கும் நல்ல பள்ளியில் சேர்க்கலாம் என்று போனால் அங்கு இடம் எல்லாம் நிரப்பப்பட்டிருந்தது. பிறகு இன்னொரு பள்ளியில் போய் கேட்டால் அங்கும் அதே பதில் தான், என்ன வம்பா போச்சுனு நினைச்சிட்டு இருக்கும் போது அந்த பள்ளிக்கு இன்னொரு கிளை இருக்கிறதாம் அங்கு வேண்டுமானால் போய் கேட்டு பார்க்க சொன்னார்கள். சரி இந்த அளவுக்காவது செய்தி சொன்னார்களே என்று நன்றி சொல்லி விட்டு 2 கீமீ தள்ளி இருந்த அந்த பள்ளிக்கு சென்றோம்.
அங்கு வாசலில் ஒரு அறிவிப்பு பலகையில் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை எழுதி வைத்திருந்தனர். வகுப்பு 1ன் மொத்த மாணவர் எண்ணிக்கை 251. அப்போதே கொஞ்சம் பயம் வந்தது. பிறகு வரவேற்பறையில் இருந்தவரிடம் போய் வகுப்பு 1ல் சேர்க்க வந்திருக்கிறோம் என்று சொன்னவுடன் ஒரு விண்ணப்ப கடிதம் எழுதி தருமாறு சொன்னார். எழுதி கொடுத்தவுடன் அதை முதல்வரிடம் அனுப்பி வைத்தார். வழக்கம் போல் முதல்வர் என்ன சொல்ல போறாரோ என்று காத்திருந்தோம் ஏறக்குறைய 15 நிமிடம் கழித்து வரவேற்பாளர் பெயர் சொல்லி அழைத்து சேர்க்கை விண்ணப்ப படிவம் பணம் கட்டி வாங்க சொன்னார். அப்போது தான் நிம்மதி வந்தது.
விண்ணப்பம் வாங்கியதும் நிரப்பிய படிவத்துடன் பிறப்பு சான்றிதல் இணைத்து அடுத்த நாள் வந்து கொடுக்க சொன்னார்.
மறுநாள் பூர்த்தி செய்த படிவத்தோடு பிறப்பு சான்றிதலையும் இணைத்து பள்ளிக்கு சென்றோம். மகனிடம் ஏற்கனவே பள்ளியில் நேர்காணல் இருக்கும் கேள்வி கேட்டால் தயங்காமல் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தோம், அவனோ பார்த்துக்கலாம் என்பது போல் ஒரு பார்வையை பதிலாய் தந்தான்.
பள்ளிக்கு சென்று விண்ணப்ப படிவம் கொடுத்தவுடன் சிறிது நேரம் கழித்து ஒரு நேர்முக தேர்வு எழுத வேண்டியது உள்ளது இன்று எழுதிகிறீர்களா அல்லது நாளை எழுதிகிறீர்களா என்று கேட்டார்கள். நாங்கள் இதை எதிர் பார்க்கவில்லை அதனால் பென்சில் எரேசர் எதுவும் எடுத்து செல்லவில்லை பிறகு அவரிடமே பென்சில் கேட்டு வாங்கி eraser கொண்டு வராத காரணத்தால் மகனிடம் எந்த கேள்விக்கும் முடிந்த வரை அழிக்காமல் சரியாக பதில் எழுதுமாறு சொல்லி அனுப்பி வைத்தோம்.
அரை மணி நேரம் கழித்து தேர்வு எழுதி முடித்துவிட்டு வந்தபின் மகனிடம் கேட்டேன் தேர்வு எப்படி என்று. அது தான் பேப்பர் தருவாங்க இல்லை அப்ப தெரிய போகுது என்று பதிலளித்தான்.
பள்ளி வரவேற்பாளர் அடுத்த நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முடிவை தெரிந்து கொள்ள சொன்னார்.
வரும் வழியெல்லாம் இதையே சொல்லி கொண்டு வந்தேன் முதலிலேயே சொல்லி இருந்தால் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு வந்திருக்கலாமே என்று. மகனோ தேர்வில் எல்லாம் சுலபமாக இருந்தது என்று சொன்னான். இருந்தாலும் இன்னும் ஒரு நாள் காத்திருக்கனுமே என்று வழக்கம் போல் பொறுமைக்கு spelling தெரியாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.
வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் ஒரு பதினைந்து நிமிடம் கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, பள்ளியிலிருந்து தான் மகன் தேர்வில் தேர்வாகிவிட்டான் என்றும் மறுநாள் வந்து பள்ளி கட்டணம் செலுத்துமாறு கூறினார்கள்.
கேட்டவுடன் சந்தோஷத்துக்கு அளவேயில்லை.
ஏன் இந்த பதிவு? என்ன சொல்ல வரேன்?
விடை இதுதான் பள்ளி நுழைவு தேர்வு எழுதப்போன மகனே தைரியத்தோடு போய் எழுதிவிட்டு வந்தான். இவ்வளவுக்கும் முந்தின நாள் ஜீரம் வேறு. ஆனால் நானோ ஒரு நிரலை நகலெடுத்து ஒட்டி preview பார்ப்பதற்குள் போதும் படும் அவஸ்தை….
ஏன் இந்த பள்ளி சேர்க்கை? ஏன் இந்த அலைச்சல்? பதில் அடுத்த பதிவில்.
சந்திப்போமா.

Thursday, June 07, 2007
பெங்களுரு – சென்னை பயணம்
*****பெங்களுரு – சென்னை பயணம்*****
அவசர அலுவல் காரணமாக வார இறுதியில் பெங்களுருலிருந்து சென்னை சென்று வர வேண்டியதாக போயிற்று.
வெள்ளிக்கிழமை பெங்களுருலிருந்து சென்னை செல்ல வியாழக்கிழமை முன்பதிவு செய்ய போனால் ரெயிலில் இடமில்லை பிறகு கருநாடக போக்குவரத்து கழகத்தை அணுகினால் வழக்கம் போல் ஒரு பேருந்தில் தான் இடமிருக்கிறது என்று பதில் வந்தது, சரி கிடைத்தால் போதும் என்று உடனே முன்பதிவு செய்தேன். வோல்வோவில் கேட்டால் அது எல்லாம் நிரம்பிவிட்டது இது புது சேவை கொரொனா என்று சொன்னார்கள்.
இரவு 9.51 பேருந்து புறப்படும் நேரம் (நன்கு கவனிக்கவும் 9.51 தான் பயணச்சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது). மெஜஸ்டிக் போக்குவரத்து நெரிசலில் மாட்டி கொண்டு ஒரு வழியாக பேரூந்து நிலையத்துக்கு 9.30 மணிக்கு வந்து சேர்ந்தேன், நடைமேடையில் வோல்வோ தான் நின்று கொண்டிருந்தது நெருங்கி சென்று பார்த்தால் அது 10.10க்கு கிளம்புற பேரூந்தாம், அப்ப நம்ம பேரூந்து போய்விட்டதா என்று சந்தேகத்தோடு அங்கு ஒட்டியிருக்கிற நேர அட்டவணையை பார்த்தால் அதில் 9.51 சேவையே காணோம், பயந்து போய் அந்த நேரக்காப்பாளரை கேட்டதற்கு இனி தான் வண்டி வரும் என்று பதில் வந்தது.
அதற்குள் 3 வோல்வோ வந்து நின்று விட்டது ஆனால் கொரொனா தான் வருவதற்கான அறிகுறியே இல்லை, நேரமோ 10.00 தாண்டியிருந்தது. பிறகு 10.10க்கு கொரோனா வந்து சேர்ந்தது.
பயணச்சீட்டை நடத்துனரிடம் காட்டி விட்டு பேருந்தினுள் ஏறினோம் எனது இருக்கை 26 பார்த்துதான் அமர்ந்தேன் நடத்துனரும் ஓட்டுனரும் பரபரக்க பேருந்தினுள் இருமுறை போய் வந்தனர். பிறகு என்னிடம் வந்து பயணச்சீட்டு கேட்டனர் பிறகு தான் தெரிந்தது நான் அமர்ந்திருந்தது வேறு இருக்கை எழுந்து போய் எனது சரியான இருக்கையில் அமர்ந்தேன். இருக்கையின் பின்புறம் இருக்கை எண் எழுதி இருக்கிறது. நான் முதலில் அம்ர்ந்த இருக்கையின் முன்னால் 26 என எழுதியிருந்த்தால் அமர்ந்துவிட்டேன்.
இதற்கிடையில் 10.30 மணி ஆகியிருந்தது வண்டி கிளம்ப ஒரு அறிகுறியும் தெரியலை. ஒரு பயணி வரலைனு இவ்வளவு காத்திருப்பு! கடைசியில் நடத்துனர் ஒரு முறை உள்ளே வந்து பார்த்தால் என் இருக்கைக்கு முன்னால் அமர்ந்திருந்த பயணியிடம் கடிந்து கொண்டார், அவர் ஏதோ வாங்க கீழே இறங்கியுள்ளார், திரும்பவும் பேருந்தில் ஏறியதை நடத்துனர் கவனிக்கவில்லை. பிறகு ஒருவழியாக இரவு 10.40க்கு கிளம்பியது. ஏதோ கன்னட படம் ஓடியது மும்பையில் குடிசைகளை காலி பண்ண வில்லன் சொல்லவும் வழக்கம் போல் நாயகன் சாவல் விடுவதும் நடந்தது. நாயகி கதைப்படி இந்திய அழகி நாயகன் சேரிவாசி இருந்தும் நாயகி நாயகனை எண்ணி கனவு பாடல் உண்டு. சகிக்கலை. படம் சத்தத்தினால் தூங்கவும் முடியவில்லை.
இதில் இன்னொரு அவஸ்தை புதிய இருக்கையில் பின்புறம் சாயும் வசதி ஏற்படுத்தும் லீவர் உடைந்து இருந்தது, மேலே உள்ள AC Vent மூடி இல்லாமல் முழு குளிர் காற்றையும் என் மீது வீசிக்கொண்டிருந்தது. இன்று இரவு சரியான அவஸ்தை தான் என்று நினைத்துக் கொண்டேன், இருக்கையின் முன்னால் உள்ள பையில் பேருந்தின் சேவை பற்றிய கருத்து கணிப்பு காகிதம் இருந்தது. முன்னால் பயணம் செய்தவர் நிறைவு செய்துவிட்டு அங்கேயே வைத்து விட்டார் போலிருக்கு, அந்த காகிதத்தை எடுத்து சுருட்டி AC Ventஐ மூடினேன்.
இருக்கையோடு ஒரு பதினைந்து நிமிட போராட்டத்துக்கு பின் ஒரு வழியாக பின்புறம் சாய்ந்தது.
எப்ப தூக்கம் வந்ததோ தெரியாது நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது ஒரு உணவகத்தில் நிறுத்தி இருந்தது. மணி இரவு 1.30. அந்த நேரத்திலேயும் ஓட்டுனரும் நடத்துனரும் உணவருந்தி விட்டு வந்தனர். 20 நிமிடத்துக்குப்பின் கிளம்பியது சிறிது நேரம் கழித்து தூக்கமும் வந்தது.
கொஞ்ச தூரம் போனவுடன் டயரில் காற்று வெளியேறிய சத்தம் கேட்டது ஏதோ AC compressor தான் சத்தம் போடுதோனு நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் வண்டி வேகம் குறைந்து போய்கொண்டிருந்தது. இந்த வேகத்தில் போனால் எப்ப சென்னை போகும் என்று நினைத்து கொண்டிருந்த போதே வண்டி ஓரம் கட்டப்பட்டது. நினைத்தது போலவே டயர் பஞ்சர். வண்டியின் AC ம் நிறுத்தப்பட்டது அதனால் வண்டியினுள் உட்கார முடியவில்லை.
நேரம் அதிகாலை 4.00 மணி , கீழே இறங்கி பார்த்தால் அருகில் நின்று இருந்த ஒரு லாரியிலிருந்து ஒரு கட்டையை வாங்கி வந்து அதன் மேல் jack வைத்து தூக்கி டயரை கழற்ற முயற்சி நடந்தது. ஆனால் jack வைத்தும் டயர் கழற்றும் அளவுக்கு மேலே எழும்பவில்லை, பின்னால் வந்த வோல்வோ நிறுத்தி என்ன என்று கேட்டுவிட்டு போய் கொண்டிருந்தது. இதற்கிடையில் லாரி ஓட்டுநர் இனிமேலும் காத்து இருக்க முடியாது என்று கூறி கொடுத்து இருந்த கட்டையையும் வாங்கி கொண்டு போய்விட்டார்.
வண்டி பழுதடைந்த இடம் பெங்களுருவிலிருந்து 223 கிமி. இன்னும் சென்னைக்கு 113 கிமி இருக்கு எப்படியும் இன்னும் ஒரு இரண்டரை மணி நேரம் பயணம் பாக்கி இருக்கு. நின்ற இடமோ ஒரு சிறுஊராட்சி அருகில் எதுவும் டயர் பஞ்சர் போடும் கடை இருக்கிற மாதிரி தெரியலை. வண்டி நிறுத்தினது தான் நிறுத்தினான் ஒரு பஞ்சர் கடை அருகில் நிறுத்தியிருக்ககூடாதோ? (டயர் காற்று போன பின்னாலும் குறைந்தது ஒரு அரை மணி நேரம் ஓடிய பின் தான் வண்டி நின்றது).
ரொம்ப நேரம் கழித்து இன்னொரு வோல்வோ கருநாடக வண்டி வந்தது முதலில் மெதுவாக வந்து பிறகு வேகம் எடுத்து போக தொடங்கியது, ஆனால் ஓட்டுநர் பின்னாலேயே சத்தம் போட்டுக்கொண்டு ஓடியதை பார்த்து பேருந்த்தை நிறுத்திவிட்டு அந்த ஒட்டுநரும் வந்து பார்த்தார். பிறகு பழுதடைந்த வண்டியின் ஓட்டுநர் நிலைமையை விளக்கிய பின் அந்த பேருந்திலிருந்து இன்னொரு jack எடுத்துக்கொண்டு வந்தார் பிறகு நடத்துனர் எங்கேயோ போய் தேடி பிடித்து ஒரு பெரிய கல்லையும் எடுத்து வந்தார்.
இப்போது இரண்டு jackன் உதவியினால் கொஞ்சம் டயர் கழற்ற இடைவெளி உண்டாகி இருந்தது. நானும் சரி இப்ப டயரை கழற்றி மாட்டிவிடுவார்கள் என்று நினைத்தால் அது பின்புறம் உள்ளே உள்ள டயர் பஞ்சர். அப்புறமென்ன அதையும் கழட்டி புது டயரை மாட்டி விட்டு அந்த வோல்வோ ஓட்டுநர் jack எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
அந்த ஓட்டுநருக்கு மிக்க நன்றி அவர் மட்டும் வண்டியை நிறுத்திவிட்டு வந்து உதவாமல் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு நேரம் நின்று இருப்போமோ தெரியாது, அவர் பேருந்தும் தாமதமாவதையும் பொருட்படுத்தாமல் கூட இருந்து டயரை கழற்றி மாற்றி கொடுத்தார். இத்தனைக்கும் வோல்வோவில் இரண்டு ஓட்டுநர் உண்டு அந்த இரண்டாவது ஓட்டுநர் வண்டி ரொம்ப நேரமா நிக்குதே என்று கேட்டு இறங்கி வந்து டயர் மாற்றிக்கொண்டிருந்த ஓட்டுநரை கூப்பிட்டார் jack மட்டும் கொடுத்தது போதும் வா என்று. ஆனால் ஒரு வேலை எடுத்தால் அதை செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணுபவர் போல் அந்த ஓட்டுனர். அந்த அதிகாலை நேரத்திலும் பொறுப்பாக இருந்து முடித்து கொடுத்தார். (கொரோனா வில் ஒரு ஓட்டுனர் தான் மாற்று ஓட்டுனர் கிடையாது).
ஒரு வழியாக வண்டி கிளம்பியது இருந்த தூக்கமெல்லாம் போயிற்று. இப்போது ஓட்டுநருக்கு தூக்கம் வந்து விட்டதோ அல்லது தாமதம் ஆகிவிட்டதாலோ என்னவோ விரைவாக ஓட்டினார், முன்னால் போன டிரைலர் லாரிகள் வழி விடாத காரணத்தால் ஓயாமல் ஒலிப்பானை வேறு ஒலிக்கவிட்டு என்னை தூங்கவிடுவதில்லை என்று முடிவு கட்டிக்கொண்டு ஓட்டினார் போலிருக்கு. இரண்டு மூணு இடத்தில் sudden brake போட்டு தூங்கிய மற்றவர்களையும் எழுப்பிவிட்டார்.
ஒரு வழியாக காலை 7 .30 மணிக்கு கோயம்பேடு வந்து சேர்ந்தது.
இந்த பதிவை எழுத காரணம், இதை படிக்கும் யாரும் இனிமேல் அந்த கொரோனா வில் பயணம் செய்ய வேண்டாம் என சொல்லதான், காரணங்கள்.
1.கொரொனோ வோல்வொ பயண கட்டணம் ஒன்று தான் ஆனால் வோல்வோவில் உள்ள வசதி ஒன்றும் கூட கொரொனோவில் கிடையாது.
வோல்வோ 265 BHP கொரொனோ 160BHP சாதரண லேலேண்டு கூட 110BHP
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது (கொரொனோ நிறுவனம் கூட பூனாவில் தான் உள்ளது) போல வோல்வோ போல் பின்னால் எஞ்சினும் airconditioning வைத்து விட்டால் ஒரு நாளும் கொரொனோ வோல்வோ ஆக முடியாது.
2.வோல்வோ sound insulated interior கொண்டது, கொரொனோவில் உள்ளே இன்ஜின் சத்தம் நல்லா கேட்கும். Prakash P8000 கூட ஓட்டுனர் cabin door close பண்ணினால் சத்தம் கம்மியாக இருக்கும்.
3. கொரொனோ மிதவை, குலுங்கல் இருக்க தான் செய்தது. வோல்வோ இன்னும் சொகுசாக இருக்கும்.
4.வோல்வோவில் Michelin tubeless tyres உண்டு, கொரொனோ வில் பஞ்சராகும் radial tyre.
5. கொரொனோ AC பற்றி என்ன சொல்ல கோயேம்பேடு வருவதற்கு 30 நிமிடம் முன்பே பேருந்தினுள் மேற்கூரையில் இருந்த AC vent வழியாக தண்ணீர் கொட்டி உட்புறம் எல்லாம் ஈரம். Drain pipe fixing சரியாக பண்ண தெரியலை போலிருக்கிறது.
6.வோல்வோவில் இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள் இதில் ஒரு ஓட்டுனரே.
இவ்வளவு அவஸ்தை பட்டு போக வேண்டியிருந்தது.
வரும் போது சனிக்கிழமை இரவு 9.45 மணிக்கு கோயேம்பேட்டிலிருந்து கருநாடக வோல்வோவில் கிளம்பினேன் அருகிலேயே நான் வந்த அதே கொரொனோ அதே ஓட்டுனர் 9.30 மணிக்கு கிளம்பியது.
எனது வோல்வோ இரவு 10.30க்கு தான் கிளம்பியது எங்கே நின்றது எப்படி வந்தது என்று தெரியாது களைப்பினால் நான் ஏறியவுடன் தூங்கிவிட்டேன், வீடியோவில் படமும் போடலை. காலை 4.15 மணிக்கு பெங்களுரு மெஜஸ்டிக் வந்து விட்டிருந்தது. இதற்கு முன் இவ்வளவு விரைவாக வந்ததில்லை.

Friday, June 01, 2007
!! இடுகை எப்படி இருக்கு !!
இடுகை ஆரம்பித்தவுடன் ப்ளாக்கருடன் வரும் வார்ப்புரு அவ்வளவா இஷ்டமில்லை, நமது ரசனைக்கு ஏற்ற மாதிரி மாற்றியே தீரணும் என்று பெருத்த ஆசை.
கூகிளாண்டவரிடம் கேட்டு, பொன்சுக்கு ஒரு மின் மடல் அனுப்பி எப்படி இந்த வார்ப்புரு மாற்றம் ஏற்படுத்தலாம் என்று கேட்டு இருந்தேன்.
பதில் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.
நமக்கு தான் பொறுமைக்கு spelling கூட தெரியாததே! வேறு என்ன செய்ய தன் நிரலே தனக்கு உதவினு edit html ல் நகல் எடுத்து வைச்சுட்டு ஒவ்வொரு வரியா சோதிக்க ஆரம்பித்ததன் விளைவு, கடிகாரம் மற்றும் counter கீழிருந்து பக்கவாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தேன்.
பெரிய படபடப்போடு preview பார்த்தேன். வாவ்!! சோதிடத்தில் சொல்வது போல் கீழிருந்த counter மேலே இடம் பெயர்ந்திருந்தது, கூடவே கடிகாரமும் சேர்த்து தான்.
பிறகு என்ன உடனே சேமித்து ஒரு பதிவையும் போட்டாயிற்று.

Wednesday, May 23, 2007
ஈ கலப்பை ஜெ.
பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.
ரொம்ப நாளா எனக்கும் இந்த பதிவை தமிழில் எழுத ஆசை தான். ஆனா எப்படி தொடங்குவது, தமிழ் எழுத்துரு எங்கிருந்து கொண்டு வருவது என்று பெரும் போராட்டம். தினமும் தவறாமல் தேன்கூட்டுக்கும் தமிழ்மணத்துக்கும் போய் படிப்பது உண்டு, பின்னூட்டமிடவும் ஆசை தான், வழக்கம் போல் தமிழ் எழுத்துரு தான் கிடைக்காமல் ஏக குழப்பம். முரசு அஞ்சல் தெரியும் இருந்தாலும் அதில் தட்டச்சு செய்து ப்ளாக்கில் கொண்டு வருவது எப்படி என்று தெரியவில்லை. அப்போது இ கலப்பை பற்றி தெரிந்து கொண்டேன், 2 நாளா வலையில் தேடி தரவிறக்கம் செய்து இப்போது தான் உபயோகிக்க கற்றுக்கொண்டேன்.(நன்றி தமிழா.காம்)
பதிவில் விரும்பி படிப்பது சென்னை கச்சேரி காரணம் எனது முதல் பின்னூட்டம் வந்தது அதில் தான், அது முதலே பேராசை தான் நாமும் தேவ் போல் பட்டய கிளப்பற பதிவை போடாமல் போக கூடாது என்று. நினைப்பது போல் நடந்து விட்டால் வேற என்ன விறுவிறுப்பு இருக்கு. தினமும் வலைப்பதிவு படிக்கிறது தான் நம்மால் முடியும் போலிருக்குனு நினைச்சிட்டு இருந்தேன்.
பதிவு சம்பந்தமாய் ஏதாவது புத்தகம் தான் படிக்கணும்னு நினைச்சுட்டு இதில் 30 நாட்களில் ப்ளாக் எழுதுவது எப்படினு புத்தகம் ஏதாவது இருக்கானு பார்த்தா ஏதும் தென்படலை (மணிமேகலை பிரசுரம் கவனிக்கவும்) சரி நாம் தான் எல்லா பதிவும் படிக்கிறோமே இதிலிருந்தே கற்றுக்கொள்வோம் என்று இறங்கியாற்று.
இனி சுகுணா திவாகர் பதிவு போல் வார்ப்புருவும், செந்தழழ் ரவி போல் நிறைய பின்னூட்டமும், ஓசை செல்லா போல் நிறைய செய்திகளும், திரும்பிப்பார் போல் அனுபவங்களும், பங்கு வர்த்தகம் போல் பங்கு நிலவரத்தையும் கலந்து கொடுக்க ஆசை நிறைய உண்டு. இந்த சோதனை பதிவு சரியாக வெளிவந்தால் முயற்சி தொடரும். இல்லையென்றால் திரும்பவும் பதிவு தான்.
தமிழ்மணத்தில் இடுகை தெரிய வேண்டுமென்றால் குறைந்தது 3 பதிவு இருக்கவேண்டுமாம். அதற்காகவாது 3 பதிவை போட்டே ஆக வேண்டிய கட்டாயம். அடுத்த பதிவுக்கு இப்பொழுதே யோசிக்க வேண்டும். பார்ப்போம் பின்னோட்டம் ஒண்ணும் வரலைன்னா பதிவு யாருக்கும் பிடிக்கைலைன்னு தெரிஞ்சுட போகுது. அதை வெச்சே அடுத்த பதிவை ஓட்டிட வேண்டியது தான்.

Subscribe to:
Posts (Atom)