Thursday, September 27, 2007

மலரும் நினைவுகள்

புதிதாக டைப் பண்ணும் போது எப்படி தெரியும் என்று தெரியவில்லை

புது அலுவலகத்தில் தமிழ் தட்டச்சு இல்லை, மேலும் என்ன செய்தும் முரசு அஞ்சல், ஈ கலப்பை எதுவும் நிறுவ முடியவில்லை. வொர்டில் டைப் அடிக்கலாம் என்றால் யுனிக்கோடே எழுத்துருவில் இல்லை. ஏதோ கூகுளாண்டவர் புண்ணியத்தில் தமிழ் blogs, google reader புண்ணியத்தில் படிக்க முடிகிறது. இருந்தாலும் ஏதாவது முயற்சி செய்து ஈ கலப்பையை நிறுவியே ஆக வேண்டும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, என் நண்பனை சந்திக்க முடிந்தது. கிட்டதிட்ட எட்டு வருடத்திற்கு பிறகு பார்த்தேன். பல கதைகள் பேசி பொழுதை கடத்த எண்ணினோம், ஆனால் அன்று பார்த்து அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வர தாமதமாகி விட்டது.

பார்த்து பேசிய சிறிது நேரத்துக்கு பிறகு கிளம்பிவிட்டான், அடுத்த நாள், நண்பனுக்கு கடல் கடந்து விமான பயணம் வேறு, வீட்டில் எடுத்த புகைப்படம் தான் அடுத்து சந்திக்கும் வரை நினைவுகளை பசுமையாக வைத்திருக்க உதவும். விரைவில் மீண்டும் சந்திப்போம் என எண்ணுகிறேன்.

2 comments:

  1. அலுவலகத்தில் firefox நிறுவ இயன்றால், அதை நிறுவி அதில் தமிழ்விசை நீட்சி நிறுவினால் தமிழில் எழுத முடியும்.

    ReplyDelete
  2. firefox நிறுவி உள்ளேன், ஆனால் தமிழ் அதில் எப்படி கொண்டு வருவது என்று தெரியவில்லை, முடிந்தால் emailல் தெரிவிக்கவும்.

    firefoxல் பதிவை திறந்தாலும் தமிழ் எழுத்துக்கள் junk characters போல் தான் தெரிகிறது, தெளிவாக தெரிய என்ன செய்யவேண்டும்

    ReplyDelete

நாகராஜ் - சென்னை