Sunday, October 16, 2016

Munnar a trip to Forget - மூணாறு அது ஆகாது

ஒரு long trip போய் நாளாச்சுதேனு யோசிச்சிட்டு இருக்கும் போது தான், quarterly vacation மகனோட schoolல் announce பண்ணாங்க Oct 8th to Oct 12, எங்க போகலாம்னு ரொம்ப யோசிச்சி மூணாறு முடிவாச்சி. ஆனா எனக்கு என்னவோ ஒரு சின்ன உதறல் மட்டும் இருந்துட்டே இருந்திச்சு.

உத்தமராசா படம் அதில் வரும் வடக்குப்பட்டி ராமசாமி காமெடி பார்த்தவங்க நல்லா சிரிச்சிருப்பீங்க ஆனா படத்தில உள்ளது நிஜத்தில் நடந்தால் சிரிப்பு வரமாட்டேங்குது.

மூணாறு terrace green resort book பண்ணினேன், ஆனா confirmation letter வரலை, சரி புறப்படறதுக்கு 2 நாள் முன்னால வரும்னு பாத்துட்டு இருந்தா ஒண்ணும் வரலை, (இப்ப வடக்குப்பட்டி ராமசாமி செருப்பு அறுந்தது ஞாபகம் வருதா) விசாரிச்சி பார்த்தா நீங்க தானே resort allotment cancel பண்ணினீங்கனு சொல்றான். அடேய் அது போன வருஷ kodaikanal booking, இன்னும் காண்பிக்கிதுன்னு cancel பண்ணினேன், நான் கேட்டது மூணாறு bookingனு விளக்கம் அருஞ்சொற்பொருள் எல்லாம் சொன்ன பிறகு allotment letter வந்து சேர்ந்தது.
தேனி போடி சாலை


போடிமெட்டு சாலை

கிளம்புவதற்கு முந்தின நாள் ஒரு report doctorட்ட காண்பிக்க வேண்டியது இருந்தது. hospital doctor இருக்கிறாரானு phone மேலே phone போட்டு கேட்டுட்டு doctor இருக்கிறார்னு confirm செய்துட்டு, ராத்திரி 8:45 மணிக்கு ஆஸ்புத்திரி போய் பார்த்தா, டாக்டர் operation theatreல இருந்து வெளிவந்துட்டு திரும்பவும் உள்ளே போயிட்டார், இனி எப்ப வருவாருனு தெரியாதுனு ஒரு அரை மணி நேரம் கழித்து சொன்னாங்க. என்னடா இது சோதனைனு நினைச்சிட்டு வீட்டுக்கு நடந்து வரும் போது ஒரு screwஆணி காலில் குத்தியது, நல்ல ஆழமா குத்தினதில ரத்தம் வர ஆரம்பிச்சிடிச்சி (என்னடா இது இரத்த காயமெல்லாம் ஆகுது, ஹும் சில தடங்கல் வர தான் செய்யும் வடக்குப்பட்டி ராமசாமி sorry மூணாரு இதோ வரேன்), 

அந்த ராத்திரி நேரத்தில ஒரு டாக்டர தேடி போனா அவரு clinic மூடிட்டு போயிட்டாரு, காலிலோ ரத்தம் வரதும் நிக்கலை, பிறகு இன்னொரு ஆஸ்பத்திரி தேடி போய் ஒரு TT Injection, 200 Rs மாத்திரை வாங்கிட்டு வீட்டுக்கு வரும் போது ராத்திரி 10 மணி.

காலையில் 6:30 மணிக்கு எங்கள் மூணாறு பயணம் தொடங்கியது, வடக்குப்பட்டி ராமசாமி கதையில சைக்கிள் செயின் அறுந்து போறது போல பெருங்களத்தூரிலேருந்தே traffic jam, செங்கல்பட்டு toll plaza 1 km Ahead Boardல் இருந்தே வாகனங்க‌ள் line கட்டி நிக்குது, 25 நிமிசத்துக்கு அப்புறம் தான் கடக்க முடிந்தது, அடுத்த இரண்டு toll gate திண்டிவனம், விக்கிரவாண்டி, அதிலயும் ஒரு 15 நிமிசம் நின்னு தான் போக முடிஞ்சது.

பெரம்பலூர் chakra milk parlourல எப்ப போனாலும் காலியா இருக்கும், அது தொடர் விடுமுறை ஆனதினால அங்கேயும் ஒரே கூட்டம், 20 நிமிஷம் நிறுத்திட்டு கிளம்பி திருச்சி காவேரி பாலத்துக்கு மேலே வந்தா மறுபடியும் traffic jam, ஏதோ காரணத்துக்கு traffic block பண்ணிட்டு, service roadல மாத்தி விட்டாங்க அதுக்கும் ஒரு 30 நிமிசம் நின்னு கடக்க வேண்டியதாப் போச்சு.
Add caption
திண்டுக்கல் ரோட்டை பிடிச்சி போகும் போது மணி மதியம் 12 மேல ஆகிடிச்சி, ஒரு பத்திரிகைல இனாம்குளத்தூர் பிரியாணி ரொம்ப பிரசித்தம்னு படிச்சது நினைவுக்கு வர, சம்முவம் வண்டிய இனாம்குளத்தூர் விட்றானு பறந்து போனோம், ஊரை பாத்தா ஒரு  பிரியாணி வாசமோ, பிரியாணி கடை போர்டோ இல்லை, பிறகு தைரியத்தை வரவழைச்சிட்டு ஒருத்தர் கிட்ட கேட்டோம், ஏங்க இது இனாம்குளத்தூர் தானே, (ஏன்னா வழி எல்லாம் அம்மாப்பேட்டைனு தான் board இருந்திச்சி.) அப்படினு கேட்டோம், அவரும் ஆமா இது தான் இனாம்குளத்தூர், இங்க யாரை பார்க்க வந்தீக, ஆரு வழில சொந்தம்னு கேட்டுட்டார், நானும் ரொம்ப தயக்கமா, இங்க பிரியாணி பிரபலம்னு சொன்னாங்க அது தான் வந்தோம்னு சொன்னோம், யாரு வழில சொந்தம்னு கேட்டாரே, அவரும் ஒரு பிரியாணி ரசிகர் போல நாங்களும் பிரியாணி கடை பத்தி கேட்கவும் ரொம்பவும் புளங்காகிதம் அடைந்து, அடடா, இங்கே ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் பிரியாணி கிடைக்கும்னு சொன்னாரு, மறுபடியும் வடக்குப்பட்டி ராமசாமி தான் ஞாபகத்துக்கு வந்தாரு, என்னத்தை பண்ண?

திரும்பவும் மெயின் ரோடு வந்து, திண்டுக்கல் நோக்கி சென்றோம், மதியம் இரண்டு மணிக்கு திண்டுக்கல் ஆச்சீஸ் மெஸ்ல் பிரியாணி உடன் நிஜாம் சிக்கன் பிரமாதமாக இருந்தது, அடுத்து திண்டுக்கல் பிரபல பூட்டு வாங்க ஆசைப்பட்டு எங்கே கிடைக்கும்னு கேட்டோம், எல்லா hardware shopலயும் கிடைக்கும்னு சொன்னதை நம்பி இரண்டு கடையில கேட்டோம், பூட்டு எல்லாம் கடைத்தெருவுல போய் கேளுங்கனு சொன்னாங்க, சரிதான்னு நம்பி கடைத்தெருவுக்கு போனா பூட்டு repair பாக்கிற ஆள் தான் இருக்காரு எங்க கேட்டாலும் பூட்டுக்கடையே இல்லை.

தேனி ரோட்டில் போடி பார்டர் கிட்ட போகும்போது தான் கார் பேப்பர் எதுவும் எடுத்துட்டு வரலைனு தெரிஞ்சுது, borderல checkpost உண்டு அங்கே car RC Book Insurance papers எல்லாம் சரி பார்ப்பாங்கனு சொன்னாங்க, சரி தான் இங்கயும் நம்ம வடக்குப்பட்டி ராமசாமி வேலைய காண்பிச்சுட்டாருனு நினைச்சிட்டு border cross பண்ண போனோம், மூங்கில் தடுப்பு போட்டு கேரளா போலீஸ்காரர் வண்டிய நிறுத்த சொன்னாரு, என்ன கேட்க போறாரோனு நினைச்சிட்டு நிறுத்தினோம், நல்லவேளை ஒண்ணும் கேட்கலை, நாங்க தான் சூர்யநெல்லி ரோட்டுக்கு எப்படி போகணும்னு கேட்டோம், checkpost  தாண்டிய உடனே rightல திரும்பி போக சொன்னார். நன்றி சொல்லிவிட்டு கடந்தோம்.

சூர்யநெல்லி ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றவுடன் தான் தெரிந்தது அது ஆள் நடமாட்டமே இல்லாத ரோடு, வனாந்திரம், அங்கு இருக்கும்  தோட்டம் எல்லாம் வனவிலங்கு வராம இருக்க மின்வேலி அமைச்சிருக்காங்க. ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய பாதை, நடுவில் வழி விசாரிக்க கூட யாரும் கிடையாது, ரோடும் பல இடங்களில் பள்ளம் நிறைந்து இருந்தது.

ரொம்ப தூரம் போனபிறகு சில பல வீடுகள் தெரிந்தது, சரி வந்த வழி சரிதானானு விசாரிக்கலாம்னு கேட்டோம், அதுவரை வந்த வழி சரிதான், மூணாறு எப்படி போகணும்னு கேட்டோம், அதுக்கு கொஞ்ச தூரம் நேரா போனா ஒரு  transformer  வரும் அதில கிழக்கே திரும்பி போக சொன்னாங்க. அந்த காட்டில அப்பவே இருட்ட தொடங்கிடிச்சி, அதில  transformer கண்டுபிடிச்சி நாங்களே இது தான் கிழக்குனு உத்தேசமா கண்டுபிடிச்சி போனோம்.

அந்த காட்டுக்குள்ளே cellphone signalம் கிடையாது, google mapலயும் அந்த ரோடே கிடையாது. ஒரு வழியா ஒரு சின்ன மழை வரவேற்க சின்னகானலுக்கு வந்து சேர்ந்தோம், அங்கு தான் ரெசார்ட் அமைந்திருந்தது. உடனே resortக்கு phone செய்து, எப்படி வரணும் வழி சொல்லுங்கனு கேட்டோம், அந்த ஆள் resortக்கு வர வழியை தவிர எல்லா விபரமும் சொன்னான், எங்களுக்கு தான் ஒண்ணும் புரியலை.

அங்கு உள்ள ஒரு டீக்கடையில் விசாரிச்சோம், தமிழ் தெரிந்த ஒருத்தர் resortகாரன் சொன்ன வழிக்கு நேர் எதிரே போக சொன்னாரு, ஏற்கனவே பட்டபாடு போதாதா இந்த ராத்திரியில எந்த மலைக்காட்டுக்கு இவரு வழி சொல்றாருனு தெரியாம, திரும்பவும் அதே resortக்கு phone செய்து, எப்படி வரணும் வழி கொஞ்சம் தெளிவா சொல்லுங்கனு கேட்டோம். ம்ஹீம் அவனா வழிய சொல்லுவான், கடைசியில டீக்கடையில் சொன்ன தமிழர் தப்பா சொல்லமாட்டாருன்னு அவரு சொன்ன வழியில போய் ஒரு இரண்டு கிலோமீட்டருக்கு அப்புறம் resort வந்து சேர்ந்தது.

Resort போய் வழி சொன்ன அந்த ஆள் கிட்டே கேட்டோம் ஏன் தப்பான வழிய சொன்னேன்னு, அதுக்கு அவனுக்கு நாங்க சூர்யநெல்லி ரோட்டிலிருந்து வருவது தெரியாம அந்த புத்திசாலி மூணாறுலிருந்து resortக்கு வர வழி சொல்லி இருக்கான், இரண்டு ரோடும் வெவ்வேறு திசைகள். ஒரு வழியா இரவு 7 மணிக்கு resort வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் களைப்பு போக நன்றாக ஓய்வு எடுத்துவிட்டு சுற்றி பார்க்க கிளம்பினோம். எங்கு போவதனாலும் டாக்சி தான் எடுத்து செல்ல வேண்டும் இந்த அரசு பேருந்து எல்லாம் அங்கே வருவதும் போவது எட்டாவது அதிசயம் தான்.

ஒரு டாக்சியை விசாரித்தோம், சுற்றி பார்க்க கிளம்புவது என்றால் காலையிலேயே கிளம்ப வேண்டும் என்றும் 1400 ஆகும் என்று சொன்னார். நாங்க கேட்ட நேரம் மதியம் 3 மணி. சரி நாளைக்கு போகலாம்னு வந்துட்டோம்.

அடுத்த நாள் வந்து பார்த்தா ஒரு டாக்சியையும் காணோம் என்னன்னு விசாரிச்சால் எல்லா touristம் வந்ததினால் மூணாறு முழுவதும் traffic jam, போன வண்டி எல்லாம் struck ஆகி நிக்கிதாம். நாங்களும் ஒரு மணி நேரம் வண்டி வரும்னு காத்திருந்து பார்த்துவிட்டு வேற எங்கயும் போகாம ரூமுக்கு வந்து சேர்ந்தோம்.

Resort  சாப்பாடு ஒண்ணும் சுகமில்ல, வெளியே hotel போய் சாப்பிடலாம்னா ஒரே hotel sarath inn, அந்த இடத்துக்கு வேற எப்படி இருக்கும், முதல் நாள் chicken biriyani வாங்கினோம், இனிப்பாக இருந்தது, அது சாப்பிட்ட பிறகு திண்டுக்கல் பிரியாணி சுவையே மறந்து போய்டிச்சி.
சரி நாமே மூணாறு பார்த்திடுவோம்னு காரில் கிளம்பி ஒரு 7 km  போயிருப்போம், ரோடு ஒத்தையடி பாதையா மாறிடிச்சி, அப்பதான் ஏன் traffic jam ஆகுதுன்னு புரிஞ்சுது, இந்த ரோட்டில எல்லாம் போய் வர முடியாதுனு அப்பவே திரும்பிட்டோம்.


இதுக்கு பேர் தான் இவங்க ஊர்ல falls


மூன்றாவது நாள் மூணாறை விட்டு காலை 7 மணிக்கு கிளம்பினோம், வழக்கம் போல் resort billல் extra person bed charges போட்டு கொடுத்தான், நாங்கள் ஏற்கனவே book செய்யும்போதே extra person included in same charge போட்டு தான் booking பண்ணோம், ஏகப்பட்ட வாக்குவாதத்துக்கு பிறகு bill settle செய்தோம். இதில் அரை மணி நேரம் கடந்துவிட்டது
திரும்பவும் அதே வனாந்திரம், போடிமெட்டு வந்து, 17 கொண்டை ஊசி வளைவு தாண்டி கீழ் இறங்கிய பின் தான் ஒரு சுகம் கிடைத்தது. தேனியில் இருந்தே 8.30 மணிக்கு நல்ல hotel காலை சிற்றுண்டி சாப்பிட தேடிட்டே வந்தோம், பெரியகுளம் வந்து தான் ஒரு hotel கண்ணில் பட்டது, சாப்பிட்டு விட்டு கிளம்பினோம், சாப்பாடு சுமார் ரகம் தான்.

வத்தலகுண்டு bypass புதிதாக உள்ளது. தேவதானப்பட்டிக்கும் ஒரு புது bypass மலையை உடைத்து அமைத்து இருக்கிறார்கள். Toll plaza கட்டி முடித்து விட்டார்கள், அநேகமாக இன்னும் ஒரு 15 நாளில் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சாய்ந்து கிடந்த toll plaza கூரையை சரி செய்துவிட்டார்கள்.

10.30 மணிக்கு திண்டுக்கல் வந்தோம், 11:15 மணிக்கு மணப்பாறை முறுக்கு வாங்கிவிட்டு 12 மணிக்கு திருச்சி வந்து சேர்ந்தோம். ஸ்டார் பிரியாணி பாடலூரில் சாப்பிட 12:30 மணிக்கு நிறுத்தினோம். ஆம்பூர் பிரியாணிக்கு உள்ள மணம் குணம் எதுவும் இல்லை புளிப்பான தக்காளி சாதம் போல் இருந்தது.
அடுத்து இரண்டு டோல் ப்ளாசாவிலும் கூட்டமே இல்லை எனவே வேகமாக வந்து கொண்டிருந்தோம். செங்கல்பட்டு தாண்டவும் சரியான நெரிசல், அதிலும் மறைமலை நகரில் Garuda Staff bus  பதினைந்து பஸ் அந்த நேரத்தில் வந்து சேர்ந்தது, தாம்பரம் வரை யாரையும் முந்த விடாமல் ஓட்டிட்டு போனார்கள். இவனுங்க மட்டும் தான் road tax கட்டினவனு நினைப்பு அவனுங்களுக்கு.

வீட்டுக்கு 4 மணிக்கு வந்து விஜயதசமி பூசையை கொண்டாடினோம்.

மூணாறு நமக்கு இனி ஆகாது.

Total Petrol 69 litres, Total Km 540 km One way
Toll Charges Up and Down Rs 786
Single way Charges
Chengalpet      Rs 50
Tindivanam      Rs 50
Vikiravandi      Rs 75
Ulundurpet      Rs 45
Thirumandurai    Rs 45
Samyapuram     Rs 40
Ponnambalapatti   Rs 88 

6 comments:

 1. உங்கள் கைபேசி எண்னை தெரிவிக்கவும் அல்லது இனணப்பு கீழே :
  dindiguldhanabalan.blogspot.in/2016/12/Bloggers-WhatsApp-Thiratti.html

  ReplyDelete
 2. நன்றி, குழுவில் இணைந்ததுக்கும், இணைப்புக்கு உதவிய திண்டுக்கல் தனபால் அவர்களுக்கும் மிக்க நன்றி, able to see whatsapp chat

  ReplyDelete
 3. அழகாக எழுதுகிறீர்கள் நண்பரே! உங்கள் மூணாறு அனுபவத்திற்குப் பிறகு எனக்கு மூணாறு போகவேண்டும் என்ற ஆசையே போய்விட்டது! ....நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
  (http://chellappaTamilDiary.blogspot.com)

  ReplyDelete
  Replies
  1. எதிர்பார்ப்புகள் வேறுபடும், நாங்கள் போனபோது ஏமாற்றம் அடைந்தோம், பிறர் அதே சமயம் கூட்டம் கூட்டமாக வந்து போவதை காண முடிந்தது.
   நான் சொல்லியது என் அனுபவ பக்கத்தை மட்டுமே.
   கருத்துக்கு நன்றி

   Delete
 4. மேலதிக தகவல், எனது தந்தை பெயரும் செல்லப்பா

  ReplyDelete
 5. நானும் மூணாறு வழியாகச் சென்றுள்ளேன் . கலந்து கட்டிய அனுபவம்

  ReplyDelete

நாகராஜ் - சென்னை