Wednesday, March 05, 2008

சென்னை கத்திப்பாரா மேம்பாலம்



கட்டுமானம் முடிந்தபிறகு


மேம்பாலம் கட்டுவதற்கு முன்



இது பாடி சந்திப்பில் வர உள்ள மேம்பாலம்


இது கோயம்பேடு மேம்பாலம்(விஜயகாந்த் கல்யாண மண்டபம் இருந்த இடத்தில்)


சென்னை நகரின் நுழைவுவாயில் என்று சொல்லப்படும் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முன்பு ஒரு பெரிய ரவுண்ட்டானாவாக இருந்தது நடுவில் நேருவின் சிலை ஒன்றும் இருந்தது. நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று கட்டாயம் ரோஜாப்பூ மாலையும் மாலை போட செல்வதற்கு வசதியாக படிக்கட்டும் சிவப்பு மிதியடி போட்டு மூடப்பட்டு இருக்கும். மற்ற நாட்களில் கையில் பிடித்திருக்கும் புறாவை பறக்க விடாமல் நேரு பிடித்து வைத்திருப்பார்.

இப்போது இந்த சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அநேகமாக மார்ச் 2008ல் தாம்பரத்திலிருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் மேம்பாலம் மேல் செல்ல அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன். மற்ற சாலைகளை இணைக்கும் மேம்பாலத்தின் பிற பகுதிகள் மேலும் ஒரூ ஆண்டு கழித்து முடிவடையும் என எதிர்பார்க்கலாம்.

மேம்பாலம் கட்டுவதற்கு முன்பும் கட்டிய பின்பும் எப்படி இருக்கும் என பார்த்து தெரிந்து கொள்ளவும்.

இந்த வழியாக தினமும் கடந்து போகிறவர்கள் இப்போதே எந்த பாதையில் ஏறி எப்படி இறங்க வேண்டும் என பார்த்துக்கொள்ளவும். வழி தெரியாமல் மேம்பாலத்தையே நாலைந்து முறை வெவ்வெறு வழிகளில் ஏறி இறங்கிய அனுபவம் எல்லாம் இனி பதிவுகளில் அடிக்கடி வரும்.

No comments:

Post a Comment

நாகராஜ் - சென்னை