குற்றாலம் போய் அருவியில் குளித்து விட்டு வர ரொம்ப நாளா ஆசை, டிவியில்
குளிக்கும் கூட்டத்தை பார்க்கும் போது எல்லாம், நாமும் போய் வரணும் என்னும்
எண்ணம் தோன்றும் இருந்தாலும் வெட்டவெளியில் எப்படி குளிப்பது என்று வெட்கம் தடை
போட்டுவிடும்.
ஜூலை மாதம் 4ந்தேதி குற்றாலம் கிளம்பலாம் என முடிவு செய்தோம், உடனே தென்காசி
அருகில் இருக்கும் நண்பர் கணேசனை தொடர்பு கொண்டு ரூம் போட சொன்னேன். நம்ம styleஏ இதுதானே, நாம் போகும் இடத்துக்கெல்லாம் யாரையாவது சிரமப்படுத்த வேண்டியது.
ஏற்கனவே கணேசனிடம் பலமுறை குற்றாலம் வருவதாக கூறி எல்லா தடவையும் ரமணன் வானிலை
அறிக்கையில் வரும் மழை போல் கடைசி நிமிடத்தில் போகமல் இருப்பது உண்டு. அதே போல்
இந்த முறையும் ஆகி விடக் கூடாது என்று முதலில் hotel room book பண்ண சொல்லிவிட்டு பிறகு
பஸ் டிக்கெட் எடுத்தேன்.
பஸ் டிக்கெட் எடுத்தது அது ஒரு தனிக் கதை, மகனுக்கு ரெயிலில் போக தான் ஆசை,
ஆனால் பொதிகை expressல் எல்லா நாளும் waiting list தான். SETCல் போக தடை பிறகு online bookingல் எந்த siteல் தள்ளுபடி இருக்கு என பார்த்து ஒரு வழியாக Madhuraja travels bus, goibibo.com siteல் டிக்கெட் எடுத்தோம், 110ரூ தள்ளுபடி கிடைத்தது
580ரூ டிக்கெட் 540ரூ மாலை 6.30 மணி பஸ் சென்னை to தென்காசி, திரும்பி வரவும் 6ந் தேதி அதே டிராவல்ஸ்ல் 6.45
மணி பஸ்ல் எடுத்து விட்டேன்.
4ந் தேடி ஆபிஸ்லிருந்து சீக்கிரமே கிளம்பி வீட்டிற்கு வந்து எல்லாம் pack செய்து எடுத்து கொண்டு பெருங்களத்தூர் மாலை 6.40 போய் சேர்ந்தோம் அங்கு ஒரு
மதுராஜா பஸ் நின்று கொண்டு இருந்தது, போய் கேட்டால் அது 5.30 மணி வண்டி எங்கள்
பஸ் பின்னால் வரும் என்று சொன்னார்கள். பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து 7.50க்கு
நாங்கள் போக வேண்டிய பஸ் வந்து சேர்ந்தது, பஸ்ஸில் 20 சீட் காலி யாரும் ஏறவில்லை,
பஸ் attender எங்களிடம் டிக்கெட்டும் கேட்டு சரி பார்க்கவில்லை எங்கே
இறங்க வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டார்.
மதுராந்தகம் தாண்டியவுடன் நல்ல மழை விழுப்புரம் வரை தொடர்ந்தது, விக்கிரவாண்டி
ஹில்டா நாற்றம் பிடித்த மோட்டலில் நின்றது 20 நிமிடத்திற்கு பிறகு கிளம்பியது, 1
மணிக்கு விராலிமலை டோல்ப்ளாசாவில் டிரைவர் மாற்றம், காலை 4 மணிக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6 மணிக்கு தென்காசி போய் இறங்கினோம்.
லாட்ஜ் ரூம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே இருந்தது வசதியாக போனது, தென்காசி
இறங்கியதும் வரவேற்றது இதமான காற்று தான், என்ன பிரமாதமான காற்று ஊருக்கே fan போட்டது போல் சுழற்றி சுழற்றி வீசுது.
கொடுத்து வைத்த மக்கள்.
காலையில் காசி விஸ்வநாதர் ஆலயம் போனேம், இங்கும் கோபுர வாசலிலேயே காற்று
சுகமாக வீசி நம்மை வரவேற்கிறது, கோபுர வாசல் தாண்டினால் காற்றின் வேகம் மிக
குறைவாக உள்ளது, மிக சிறந்த கட்டிட கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு, அந்த அற்புதத்தை
ரசித்துக் கொண்டே சிவனை தரிசிக்க சென்றோம், தரிசனம் பிரமாதமாக கிடைத்தது. கோவிலை
சுற்றி பார்த்துவிட்டு, ஆனந்த பவன் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஒரு மினி பஸ்
பிடித்து குற்றாலம் போனோம், நாங்கள் போன நேரம் கல்லூரி நேரம் குற்றாலம் பராசக்தி
கல்லூரி மாணவிகளால் பஸ் நிரம்பி வழிந்தது. வழக்கம் போல் கல்லூரி மாணவிகளின்
கிண்டல் பேச்சு இருந்தது, என்ன ஒரு வித்தியாசம் எல்லா மாணவிகளும் மற்ற மாணவிகளை
அக்கா என்று சொல்லிவிட்டே வாரிவிடுகிறார்கள், நல்ல மரியாதை?
குற்றாலத்தில் இறங்கி குற்றாலநாதர் கோவிலுக்கும் போய்விட்டு மெயின் அருவிக்கு
போனோம், என்ன ஒரு கூட்டம். இடித்து பிடித்து ஒரு வழியாக குளித்து விட்டு வந்தோம், அருவியில் அன்று தண்ணீர் நிரம்பி வழிந்தது,
என்னா ஒரு வேகம்!!, அருவி விழும் அழகை பார்ப்பதற்கே அவ்வளவு இதம், குளிக்கும் போது
முதல் அருவி நீர் படும்போது ஒரு குளிர் ஒரு சிலிர்ப்பு பின்பு அருவியில் நனைய நனைய
சுகம் தான், அது தான் யாரும் அருவியை விட்டு போக மனம் இல்லாமல் நிற்கிறார்கள் போல.
பிறகு சீசன் கடைகளில் தேவையானதை வாங்கி விட்டு ரூமுக்கு வந்து சேர்ந்தோம்.
கொஞ்ச நேரத்தில் நண்பர் கணேசனும் வந்துவிட மதியம் சாப்பிட சென்றோம், இந்த முறை
செல்லப்பா ஹோட்டலுக்கு போனோம், குளித்து விட்டு வந்த பசி நன்றாக சாப்பிட்டு விட்டு
அடுத்து எங்கே எப்படி போவது என்பதை நண்பரிடம் விட்டு விட்டேன்.
நண்பர் ஒரு சுமோ காரை கொண்டு வந்து தந்து, அதில் ஐந்தருவி போகலாம் என்றார்,
சிக்கல் என்னவென்றால் காரை ஓட்டி போகவேண்டியது நான்தான், இதற்கு முன்னால் சுமோ
காரெல்லாம் ஓட்டியது இல்லை, அடுத்தவர் வாகனத்தை தொடுவது என்றாலே பயம், நண்பருக்கு
என் மேல் எப்படி நம்பிக்கை வந்ததோ, வண்டியையும் கொடுத்துவிட்டு கூடவே வந்தார்.
நல்ல தைரியசாலி தான்.
அப்போது தான் power steering இல்லாத வண்டி எப்படி செல்லும் என்று அறிந்து
கொண்டேன், highwayல் போகும் போது எல்லாம் வழி விடாமல் செல்லும்
லாரியையும் பிற வாகனத்தையும் திட்டியது உண்டு, இன்று சுமோ ஓட்டும் போது தான், power
steering இல்லாத வாகனம் ஓட்டுவதற்கும் திருப்பி
வழிவிடவும் எவ்வளவு சிரமம் என புரிந்தது. அடுத்த முறை சாலையில் இத்தகைய வாகனத்தை
பார்த்தால் ஒதுங்கி வழிவிட தோன்றியது.
ஐந்தருவியை அடைந்தோம் கூட்டமான கூட்டம், வண்டி நிறுத்தக் கூட இடமில்லை, பிறகு
பார்க்கிங் நிறுத்தும் இட்த்தில் சண்டை போட்டு ஒரு வழியாக வண்டியை நிறுத்தினோம்.
அருவியில் குளிப்பதற்க்கு மிகப்பெரிய வரிசை, குளிக்க இஷ்டமில்லாமல் கிளம்பி பழைய
குற்றாலம் வந்தோம், இங்கே வண்டி நிறுத்த வசதியான இடம் பத்திரமாக நிறுத்திவிட்டு
அருவியை பார்க்க ஒரு கிலோமீட்டர் நடந்து போனோம், இங்கும் அருவி கொட்டிக்கொண்டு
இருந்தது கூட்டமும் சமாளிக்கும் அளவிற்க்கு இருந்தது, மகனும் மனைவியும் ஆசை தீர
குளித்து மகிழ்ந்தார்கள், ஒரு மணி நேரம் கழித்து கிளம்பினோம்.
இரவு முக்கியமான விஷயம் பார்டர் கடை போய் சாப்பிடுவது, நல்ல வேளை நண்பரின் வேறு
ஒரு நண்பர் காரை ஓட்ட பிரண்வூரில் உள்ள பார்டர் கடையை அடைந்தோம் ராத்திரி 8 மணி
கடை உள்ளே சுமாரான கூட்டம் சுவையான பரோட்டவும் பெப்பர் சிக்கனும் சாப்பிட்டோம்,
பரோட்டா நிஜமாகவே மிகவும் மிருதுவாக இருந்தது, கோழிக்கறியும் சால்னாவும் கூட நல்ல
ருசி, பிரபலமடைந்த கடை என்பது நன்கு தெரிந்தது.
அடுத்த நாள் மாலை 6.45மணிக்கு கிளம்பினோம், பஸ் கிளம்பி மதுரை ரோட்டில்
திரும்பியவுடன், ஒரு மினி லாரி நிரைய வந்திருந்த மங்குஸ்தான் பழ பெட்டிகளை பஸ்
டாப்பில் ஏற்ற தொடங்கினர், ஒரு மணி நேரமானது சுமார் 300 பெட்டிகளை ஏற்றி முடிக்க, இந்த
பழம் சாப்பிட எப்படி இருக்கும் இதுவரை சுவைத்தது இல்லை, இவ்வளவு பெட்டி ஏற்றி
வருகிறார்கள் என்றால் சுவை சுமாராக இருக்கும் என எண்ணுகிறேன். பின்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் 30 நிமிடம் நின்றது இரவு 10.45 மணிக்கு திருமங்கலம்
ஹோட்டலில் ஒரு 30 நிமிடம் நிறுத்திவிட்டிருந்தனர். ஒருவழியாக கிளம்பி மறுநாள் காலை
6 மணிக்கு குரோம்பேட்டை வந்து சேர்ந்தோம்.
காசி விஸ்வநாதர் கோவில் கோபுரம் |
கோவில் முன்பு மகனும் மனைவியும் |
நானும் மனைவியும் |
மெயின் அருவி குற்றாலம் |
மெயின் அருவி குற்றாலம் முன்பு மனைவி, மகன்
பார்டர் கடை போர்டு
பரோட்டா போட 5 பேர்