புத்தாண்டு பிறக்கும் வேளையில் மீண்டும் நண்பர்களை சந்தித்து புத்தாண்டை கொண்டாடினால் எப்படி இருக்கும் என நினைத்தோம், நாம் தான் நினைப்பதை தானே சொல்வோம், சொல்வதை தானே செய்வோம், உடனே செயலில் இறங்கினோம், மீண்டும் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி, இ-மெயில், தொலைபேசியில் அழைப்பு என புறப்பட்டாச்சு.
வெளிநாட்டு நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள், சிலர் தாய்நாட்டிற்கு வரும்பொழுது சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என்றார்கள், எல்லாம் போனமுறை நடந்து முடிந்த சந்திப்பின் வெற்றி, எல்லோருடைய கோரிக்கையையும் ஏற்க முடியவில்லை.
இருந்தாலும் ஜனவரி 3 தேதி சந்திக்கலாம் என முடிவாகி உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர் சார்பில் கேட்டு கொள்கிறோம்.
மீண்டும் சந்திப்போமா. புத்தாண்டு வாழ்த்துக்களுடன்