புத்தாண்டு பிறக்கும் வேளையில் மீண்டும் நண்பர்களை சந்தித்து புத்தாண்டை கொண்டாடினால் எப்படி இருக்கும் என நினைத்தோம், நாம் தான் நினைப்பதை தானே சொல்வோம், சொல்வதை தானே செய்வோம், உடனே செயலில் இறங்கினோம், மீண்டும் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி, இ-மெயில், தொலைபேசியில் அழைப்பு என புறப்பட்டாச்சு.
வெளிநாட்டு நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள், சிலர் தாய்நாட்டிற்கு வரும்பொழுது சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என்றார்கள், எல்லாம் போனமுறை நடந்து முடிந்த சந்திப்பின் வெற்றி, எல்லோருடைய கோரிக்கையையும் ஏற்க முடியவில்லை.
இருந்தாலும் ஜனவரி 3 தேதி சந்திக்கலாம் என முடிவாகி உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர் சார்பில் கேட்டு கொள்கிறோம்.
மீண்டும் சந்திப்போமா. புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
Wednesday, December 23, 2009
Thursday, August 27, 2009
கூகிள் SMS சேவை
கூகிளாரின் புதிய சேவை Google SMS இதில் நாமே புதிதாக ஒரு channel உருவாக்கி கொள்ளலாம் பிறகு அதில் வலைப்பூவையோ பதிவு செய்து விட்டால் புது பதிவு ஒன்றை பதிவிடும் போது Google SMS ல் யாரெல்லாம் உறுப்பினர் ஆக உள்ளார்களோ அவர்களுக்கு எல்லாம் உடனே தகவல் அலைபேசியின் மூலம் அனுப்பபடும்.
மேலும் இது ஒரு இலவச சேவை, பிறகென்ன நண்பர்கள் அனைவரும் தங்கள் அலைபேசி எண்ணை Google SMS, Nagaraj_update ல் பதிவு செய்து கொள்ளவும்.
Google SMS பற்றி தெரிந்து கொள்ள Google வலைத்தளம் சென்று SMS ல் கிளிக் செய்தால் போதும் ஏராளமான Google SMS ல் பதிவு செய்து கொள்ளலாம்
தவறாமல் Nagaraj_update ல் பதிவு செய்யவும்.
Subscribe to:
Posts (Atom)