Wednesday, April 09, 2008

கத்திப்பாரா மேம்பாலம் திறப்புவிழா


நீண்ட நாள் நடந்த கட்டுமானப்பணி ஒரு வழி பாதை வழியே, கத்திப்பாரா மேம்பாலத்தில் செல்ல வழி வகுத்துள்ளது. இனி தாம்பரத்தில் இருந்து வடபழனி செல்லும் வாகனங்களும், வடபழனியிலிருந்து தாம்பரம் செல்லும் வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறி இறங்கி வாகன நெரிசலில் சிக்காமல் செல்லலாம். விரைவில் மற்ற வழி பாதைக்கான பணிகளும் துரித கதியில் முடிவடையும் என எண்ணுவோம்.



இன்று 09-04-08 திறப்பு விழா இருப்பதால் மேம்பாலமே ஒளி வெள்ளத்தில் இரவில் மிதக்கிறது, கைபேசியில் எடுத்த புகைப்படம் நன்றாக வந்தால் அதையும் இணைக்கிறேன், இப்போதைக்கு தினமலருக்கு நன்றி.

26-10-2008 ல் கத்திப்பாரா மேம்பாலம் திறக்கப்பட்டது.

குரோம்பேட்டையிலும் பேருந்து நிறுத்தம் இன்று திறந்து வைக்கப்படுகிறது, அதுவும் தாம்பரம் பேருந்து நிறுத்தம் போல் தனியார் வாகன நிறுத்தமாக மாறாமல் இருந்தால் நன்று.

மேலும் குரோம்பேட்டையின் ரயில் நிலையம் முன்பு சாலையை கடக்க நடை மேம்பாலம் கட்டவும் இன்று அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது, இந்த பணியும் சீக்கிரம் முடிவடையும் என எண்ணுவோம்.

இன்று மற்றொரு நிகழ்ச்சியில் தாம்பரம் பெங்களூர் புறவழி சாலையை இணைக்கும் வாகன சுரங்க பாதையும், திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை கட்டப்பட்டுள்ள மின் தூக்கி (lift) வசதியுள்ள பாதசாரி சுரங்கப்பாதையும் திறக்கப்படுகிறது.