Wednesday, February 20, 2008

கணிணி தொல்லை

நீண்ட நாள் கனவான கணினி வாங்கும் ஆசை இப்போது தான் நிறைவேறியது. கணினி வந்தவுடன் இ -கலப்பை எடுத்து உழுது 3 போகமும் விளைச்சல் எடுக்க ஆசைப்பட்டேன், ஆனால் ஆசை நிறைவேற ஏகப்பட்ட தடைக்கல் இருப்பது இப்போது தான் தெரியவந்தது.

புத்தக கண்காட்சி பார்க்க போய் அங்கு சில விளையட்டு குறுந்தகடுகள் வாங்கி வந்தேன். வாங்கும் போதே கடைக்காரரிடம் கேட்டு தான் வாங்கினேன், எப்படி நிறுவ வேண்டும் என்று. RUN type அடிங்க போதும் எல்லாம் அதுவே செய்து முடித்து விடும் என்று விளக்கினார்.

வீட்டிற்கு வந்து நிறுவ முற்படும் போது அது ஏகப்பட்ட கேள்விகளையும் துணை கேள்விகளையும் கேட்டது. ஆனால் 2 மணி நேரம் அதனோடு போராடிய பிறகு தான் தெரிந்தது அநேக விளையாட்டுக்கள் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்து, அதுவும் shareware, அதற்கு crack ஒன்றும் கொடுக்கவில்லை எல்லாம் இணைய இணைப்பையும் கடன் அட்டை எண்ணையும் கேட்டு பாடாய் படுத்துகிறது.

நிறுவிய சில விளையாட்டுகளும் ஒழுங்காக இயங்கவில்லை. குறுந்தகடு அட்டையில் உள்ளவை குறுந்தகட்டில் கிடையாது. இதில் பெரிய பிரச்சனை, என் மகன் அட்டையில் உள்ள விளையாட்டை பார்த்துவிட்டு வாங்க வைத்தான், வீட்டில் வந்து நிறுவி பார்த்தால் பிடித்த விளையாட்டு இல்லை, இருக்கும் விளையாட்டுகளும் ரசிக்கும்படி இல்லை. பெருத்த ஏமாற்றம்.

புத்தக கண்காட்சியில் இனி அடுத்த முறை குறுந்தகடு வாங்கினால் அங்கேயே பிரித்து போட்டு பார்த்து தான் வாங்கணும். வேறு யாரேனும் இந்த மாதிரி பாதிக்கப்பட்டிறிக்கீறீர்களா. இந்த ஏமாற்று வியாபாரத்தை புத்தக கண்காட்சி அமைப்பாளர்கள் தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

இப்போது முறையான விளையாட்டுகளை நிருவாததனால் எனக்கு கணிணி பக்கம் போக அனுமதி கிடையாது. மீறி அம்ர்ந்தாலும் மகன் சரியாக நிறுவாத விளையாட்டுகளை மீண்டும் நிறுவ சொல்லி ஒரே போராட்டம் தான்.

அடுத்த தடைக்கல் இணைய இணைப்பு, இணையத்தில் சில பிடித்த வலைப்பக்கங்களைபார்க்க சொல்லி கொடுத்துவிட்டேன் அதிலிருந்து கணிணியை இயக்கினாலே tinkleonline.com போய் அதில் இருக்கும் அனைத்து Archivesம் விடாமல் பார்த்துக்கொண்டிருகிறான். அதனால் அங்கேயும் நமக்கு தடா.

இப்படி எல்லா தடைகளையும் கடந்து வந்து இரவு 11 மணிக்கு கணிணியில் அமர்ந்தால், Home Ministerக்கு அப்போது தான் Spider solitaire விளையாட நேரம் கிடைக்குதாம். என்ன பண்ணுவது.
நீண்ட நாள் கனவான கணினி வாங்கும் ஆசை இப்போது தான் நிறைவேறியது. கணினி வந்தவுடன் இ -கலப்பை எடுத்து உழுது 3 போகமும் விளைச்சல் எடுக்க ஆசைப்பட்டேன், ஆனால் ஆசை நிறைவேற ஏகப்பட்ட தடைக்கல் இருப்பது இப்போது தான் தெரியவந்தது.

புத்தக கண்காட்சி பார்க்க போய் அங்கு சில விளையட்டு குறுந்தகடுகள் வாங்கி வந்தேன். வாங்கும் போதே கடைக்காரரிடம் கேட்டு தான் வாங்கினேன், எப்படி நிறுவ வேண்டும் என்று. RUN type அடிங்க போதும் எல்லாம் அதுவே செய்து முடித்து விடும் என்று விளக்கினார். வீட்டிற்கு வந்து நிறுவ முற்படும் போது அது ஏகப்பட்ட கேள்விகளையும் துணை கேள்விகளையும் கேட்டது. ஆனால் 2 மணி நேரம் அதனோடு போராடிய பிறகு தான் தெரிந்தது அநேக விளையாட்டுக்கள் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்து, அதுவும் shareware, அதற்கு crack ஒன்றும் கொடுக்கவில்லை எல்லாம் இணைய இணைப்பையும் கடன் அட்டை எண்ணையும் கேட்டு பாடாய் படுத்துகிறது. நிறுவிய சில விளையாட்டுகளும் ஒழுங்காக இயங்கவில்லை. குறுந்தகடு அட்டையில் உள்ளவை குறுந்தகட்டில் கிடையாது. இதில் பெரிய பிரச்சனை, என் மகன் அட்டையில் உள்ள விளையாட்டை பார்த்துவிட்டு வாங்க வைத்தான், வீட்டில் வந்து நிறுவி பார்த்தால் பிடித்த விளையாட்டு இல்லை, இருக்கும் விளையாட்டுகளும் ரசிக்கும்படி இல்லை. பெருத்த ஏமாற்றம். புத்தக கண்காட்சியில் இனி அடுத்த முறை குறுந்தகடு வாங்கினால் அங்கேயே பிரித்து போட்டு பார்த்து தான் வாங்கணும். வேறு யாரேனும் இந்த மாதிரி பாதிக்கப்பட்டிறிக்கீறீர்களா. இந்த ஏமாற்று வியாபாரத்தை புத்தக கண்காட்சி அமைப்பாளர்கள் தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.